யாழில் கடல் பண்ணை அமைக்க சிங்களவருக்கு 30 ஏக்கர்!
யாழ்ப்பாணம், புங்குடுதீவு மடத்துவெளி பிரதேசத்தில் கடற்தொழில் அமைச்சினால் தென்னிலங்கையினை சேர்ந்த நபர் ஒருவருக்கு 30 ஏக்கரில் கடல் அட்டை பண்ணை அமைக்க அனுமதி வழக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள சிறீ முருகன் கடற் தொழிலாளர் சங்கத்தின் முக்கியஸ்தர்களை ஏமாற்றியே இந்த செயற்பாடு நடாத்தப்பட்டுள்ளது எனவும் இதன் பின்னணியில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இருப்பதாகவும் அந்த பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி கடல் அட்டை பண்ணை அமைக்கப்பட்டால் இந்த பகுதியில் உள்ள கடல் வளங்கள் முற்று முழுதாக அழிக்கப்படலாம் எனவும் குடும்பத்தோடு தற்கொலை செய்வதை தவிர தமக்கு வேறு வழி இல்லை எனவும் அந்த மீனவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.