பருத்தித்துறை வீதியில் சாரதிகளை அச்சுறுத்தி லஞ்சம் வாங்கும் பொலிசார்!! வீடியோ
யாழ் பருத்தித்துறை வீதியில் இன்று காலை 8 மணி முதல் புத்துார் சோமஸ்கந்தா பாடசாலைக்கு முன் நின்று இரண்டு போக்குவரத்துப் பொலிசார் மிகக் கேவலமான முறையில் வாகனச் சாரதிகளை அச்சுறுத்தி பணம் பறித்து வருகின்றார்கள்.
புத்துார் சந்திக்கு அருகில் உள்ள வளைவுப் பகுதியில் உள்ள ஒற்றைக் கோட்டைத் தாண்டி வருவதாக கூறி நீதிமன்ற நடவடிக்கை என சாரதிகளை அச்சுறுத்தி ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையாக பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த ஒற்றைக் கோட்டைத் தாண்டாமல் வந்த வாகனங்களைக் கூட வழி மறித்து ஒற்றைக் கோட்டை தாண்டி வருவதாகக் கூறி வழக்குப் பதியப் போவதாக அச்சுறுத்தி இரு பொலிசாரும் பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
லஞ்சம் கொடுக்காமல் எதிர்ப்புத் தெரிவிக்கும் சாரதிகளுக்கு நீதிமன்றத்திற்கு அனுப்பப் போவதாக அச்சுறுத்தி அங்கு போனால் சட்டத்தரணிகளே உங்களிடம் 5 ஆயிரம் வாங்குவார்கள்.
அ்த்துடன் தண்டனைப் பணம் 7500 கட்ட வேண்டும். மல்லாகம் நீதிமன்றத்தில் வந்து ஒரு நாள் முழுவதும் நிற்க வேண்டும்… எப்படி வசதி என வெளிப்படையாக கூறி சாரதிகளை கதி கலங்க வைத்து ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரையான பணத்தைப் பெற்று வருகின்றார்கள்.
வெள்ளைக் கோட்டைத் தாண்டாது வந்த சாரதி ஒருவரை இவ்வாறு அச்சுறுத்தி 2 ஆயிரம் ரூபா வாங்கும் போது குறித்த சாரதி வீடியோவாக அதனை எடுத்து வைத்துள்ளார். இன்னொரு சாரதி தன்னுடன் வந்த இன்னொருவரின் சாட்சியுடன் பொலிசார் தொடர்பான செயற்பாட்டை ஆதாரத்துடன் வைத்துள்ளார்.
ஆனால் இவர்களின் லஞ்ச செயற்பாட்டை நீதிமன்றத்திற்கு எவ்வாறு கொண்டு செல்வது என தெரியாது இருப்பதாக அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் லஞ்சம் கொடுப்பதும் தவறு என்பதால் தாங்கள் தண்டிக்கப்படலாம் என அவர்கள் அச்சம் தெரிவித்து வீடியோவை தர மறுக்கின்றார்கள்.
எந்தவித தப்பும் செய்யாது இருந்தாலும் அவர்கள் நீதிமன்றத்திற்கு வழக்கு எழுதினால் அங்கு சென்று அலைந்து பெரும் நேரச்செலவு மற்றும் பணச் செலவு ஏற்படும் என்ற காரணத்தால் பொலிசாரின் கேவலமான நடவடிக்கைகளைப் பொறுத்துப் போகவேண்டி உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறு பிச்சை எடுக்கும் பொலிசாரை திருத்த முடியாது என்பதுடன் எந்த அரசாங்கம் வந்தாலும் இந்த நிலை மாறாது என்பது தெளிவாகத் தெரிகின்றது.