விளாடிமிர் புதின் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு?

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், ரஷ்ய தலைவர் விளாடிமிர் புட்டினுடன் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

உக்ரைனில் போரை “24 மணி நேரத்திற்குள் முடிவுக்கு கொண்டு வர முடியும்” என முன்பு தெரிவித்திருந்த டிரம்ப், இதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் விவரங்கள் இன்னும் தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“போரை முடிக்க வேண்டும். அது ஒரு இரத்தக்களரி குழப்பம்,” என்று அவர் நேற்று (வியாழக்கிழமை) கூறினார்.

எனினும், உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தன்னுடைய திட்டம் தொடர்பான விவரங்களை வெளியிடாமல், போரைக் குறுகிய காலத்தில் முடிக்க முடியும் என மட்டும் உறுதியளித்தார்.

“ஆறு மாதங்களுக்கு முன்பே போர் முடிந்திருக்கும் என நான் நம்புகிறேன்,” என்று அவர் புளோரிடா மார்-ஏ-லாகோ இல்லத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்கள், டிரம்ப் பதவியேற்கும் முன்னரே உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போருக்கு தீர்வு காணும் முயற்சிகளில் அவர் ஈடுபட உள்ளதை உணர்த்துகின்றன.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.