ஜனவரியை தமிழ் மாதமாக அறிவிக்க அமெரிக்க பாராளுமன்றில் தீர்மானம் !

அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தீர்மானத்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி எம்.பி. தலைமையிலான குழு கொண்டுவந்தது. இதில் ரோ கன்னா, அமி பெரா, ஸ்ரீ தானேதர், பிரமிளா ஜெயபால், சுஹாஸ் சுப்பிரமணியம் உள்ளிட்ட 15 உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

இது குறித்து ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
“ஒரு தமிழ்-அமெரிக்கராக, தமிழ் மொழி, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மதிக்கும் இந்த இரு கட்சி தீர்மானத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமையாக இருக்கிறது. அமெரிக்கா என்பது பல்வேறு மொழிகளையும் கலாச்சாரங்களையும் உள்ளடக்கிய நாடாகும். இந்தத் தீர்மானம், 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ்-அமெரிக்கர்களின் தனித்துவமான கலாச்சாரத்தையும் அவர்களின் சாதனைகளையும் வெளிச்சமிட்டு காட்டும். எனவே, இந்த தீர்மானத்தை விரைவாக நிறைவேற்றுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இந்தத் தீர்மானத்துக்கு பல தமிழ் அமைப்புகள் உற்சாகமான வரவேற்பு தெரிவித்துள்ளன.
தமிழ்-அமெரிக்கர்கள் ஐக்கிய பி.ஏ.சி. அமைப்பு இதைப் பற்றி கூறுகையில்:
“பண்டைய தமிழ் மக்களின் வளமான வரலாறையும், உலகுக்கு அவர்கள் அளித்த பெருமைமிகு பங்களிப்புகளையும் இந்தத் தீர்மானம் வெளிப்படுத்துகிறது,” என தெரிவித்தது.

வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு இதனை வரவேற்று:
“பெருமைமிகு தமிழ்-அமெரிக்கர்களாக, இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறோம்,” என தெரிவித்துள்ளது.

அதேபோல், அமெரிக்க தமிழ் நடவடிக்கைக் குழு, ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி தெரிவித்து, இந்தத் தீர்மானத்தை விரைவாக நிறைவேற்றுமாறு பாராளுமன்றத்தை வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.