யாழ். பல்கலையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ள பிரபாகரனின் 67வது பிறந்தநாளான இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவர்கள் அவரது உருவ படத்திற்கு முன்பாக கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

தற்போது மாவீரர் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்.பல்கலைகழக சூழலில்  ஆயுதங்களுடன் இராணுவத்தினர் , பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு , புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ். பல்கலைகழகத்தினுள் மாணவர்கள் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.