23 வயது மனைவி கொலை, மலசல கூடம் அருகில் புதைக்கப்பட்ட சடலம், கணவன் கைது, முல்லைத்தீவில் சம்பவம்!

முல்லைத்தீவு நீராவிபிட்டி பகுதியில் 23வயதுடைய இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் இன்று உடலம் மீட்கப்பட்டது. இந்நிலையில்  23வயதுடைய கணவன் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீராவிப்பிட்டி பகுதியில் சில நாட்களாக வாடகைக்கு வீடு பெற்று தங்கி வந்த இளம் குடும்ப பெண்ணே கொலை செய்யப்பட்டு வீட்டின் மலசலகூடத்திற்கு அருகே குழி தோண்டி புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த கீதா (வயது 23) என்பவரும், முள்ளியவளை குமாரபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய ஆணும் திருமணம் செய்தனர்.

இவர்கள் நீராவிப்பிட்டி கிழக்கு பகுதியில் வீடொன்றை வாடகைக்கு பெற்று கடந்த 3 வாரமாக வசித்து வந்தனர். இந்நிலையிலையே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இளம் குடும்ப தலைவனை பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட 23வயது குடும்ப பெண் தினமும் தனது தாயுடன் தொலைபேசியில் உரையாடும் நிலையில், கடந்த 21 திகதிக்கு பின் மகளின் தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் நேற்று திங்கட்கிழமை (23) மகளும் மருமகனும் வசித்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் ஒருவரையும் காணவில்லை.

அத்தோடு வீட்டின் பின்புறம் புதிதாக மண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று காணப்பட்டுள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார் தனது மகள் மற்றும் மருமகனை காணவில்லை என முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு  செய்திருந்தார். இந்நிலையிலையே இன்று சடலம் மீட்கப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.சங்கீத் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.