வேலன் சுவாமிகளை தூசனத்தால் பேசிய கஜேந்திரகுமார் அணி!
திலீபன் அவர்களின் 35வது நினைவேந்தல் கடந்த 26ம் திகதி நல்லூரில் உள்ள நினைவுத்தூபியில் இடம்பெற்று இருந்தது.
இந்நினைவேந்தலின் போது கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் நினைவேந்தலை குழப்பும் விதத்தில் செயற்பட்டு இருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.
நினைவேந்தலின் போது ஏற்பட்ட குழப்ப நிலைமை தொடர்பில் அக்கட்சியின் ஊடக பேச்சாளர் சுகாஷ் அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்.
இந்நிலையில் திலீபன் நினைவேந்தல் பொது கட்டமைப்பு சார்பில் காக்கா அண்ணா நடந்தவற்றை விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில்தான் திலீபனின் இறுதி நினைவேந்தல் தினமன்று வேலன் சுவாமிகளை மலரஞ்சலி செய்ய விடாது வேண்டுமென்றே தடுத்ததோடு தூசண வார்த்தைகளால் திட்டியமை போன்றவை மிக அநாகரிகமான செயற்பாடுகள் என முன்னாள் போராளியான காக்கா அண்ணா குறிப்பிட்டுள்ளார்.