ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களுக்கு தடை விதிப்பு!
ஆஸ்திரேலிய பாராளுமன்றம் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் டிக்டொக், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாக்களை நிறைவேற்றியது.
இச்சட்டத்திற்கு 102 வாக்குகள் ஆதரவாகவும் 13 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன. சட்டத்தை மீறுவோருக்கு 50 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.
பிரதமர் அன்டனி அல்பானீசின் ஆலோசனையின் பேரில் அனைத்து மாகாணங்களும் சட்டத்திற்கு ஒத்துழைப்பு தெரிவித்துள்ளன.