ஏவுகணை தாக்குதலில் 89 வீரர்கள் பலி – ரஷ்ய இராணுவம்

(LBC Tamil) புத்தாண்டு தினத்தில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 89 படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

படை வீரர்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்தியமையே இதற்கு காரணமென ரஷ்யா சுட்டிக்காட்டியுள்ளது.

தமது படைவீர்கள் தடை செய்யப்பட்ட தொலைபேசிகளை பயன்படுத்தியமையால், அவர்களது இடங்களை அடையாளங்காண உக்ரைனுக்கு இலகுவாக இருந்ததாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவால் கையகப்படுத்தப்பட்ட டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் மக்கிவ்கா நகரிலுள்ள கல்லூரி ஒன்றில் கடந்த முதலாம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டனரா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.