காஷாவில் மரணிக்கும் மழழைகள்
இஸ்ரேலின் தாக்குதலால் காஷாவில் கடந்த 48 மணித்தியாலங்களில் 50க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஜபாலியா நகரில் நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு, யுனிசெப் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த மிலேச்சதனமான செயல் எந்தவொரு வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், காஷாவில் சிறுவர்களுக்கு வழங்கப்பட உள்ள போலியோ தடுப்பூசிகள் இஸ்ரேலின் தாக்குதல்களால் இடைநிறுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி நிலையங்களுக்கு அண்மையில் நடந்த தாக்குதல்களில் நான்கு சிறுவர்கள் காயமடைந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலின் செயல்கள் யுத்த நியதிகளை மீறுவதாகவும், உலக நாடுகள் இதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுக்காததற்கான காரணங்கள் என்னவென்பதற்கான கேள்விகள் எழுந்து வருகின்றன. மனித உரிமை அமைப்புகள், முக்கிய அமைப்புகள் இந்த தாக்குதல்களை கண்டிக்க வேண்டுமெனக் கூறுவதற்கு மௌனம் காப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கண்டிக்கின்றன.
உலக அமைதிக்கான பிரார்த்தனைகளில் ஈடுபடும் வத்திக்கானும் மௌனித்துள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இஸ்ரேலின் தாக்குதலால் உயிரிழப்பது இனங்கள் அல்ல, மனிதர்கள் என உணர்ந்துகொண்டு இந்நிலை நீடிக்காது என்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.