வௌிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை நீக்கும் சீனா
(LBC Tamil) வௌிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை எதிர்வரும் 08ஆம் திகதி முதல் நீக்குவதற்கு சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சீனா தமது zero-Covid கொள்கையை கைவிட்ட நிலையில், இதுவரை நடைமுறையில் இருந்த பல கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சீனாவிற்கு செல்லும் அனைத்து விமான பயணிகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த 05 வார தனிமைப்படுத்தல் காலம் பின்னர் 05 நாட்களாக குறைக்கப்பட்டது.