அமெரிக்கா உதவியை நிறுத்தினால் உக்ரைனுக்கு தோல்வி நிச்சயம்!
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க இராணுவ உதவி நிறுத்தப்படின் உக்ரைன் தோல்வி அடையும் என்று தெரிவித்துள்ளார். ரஷ்யா எதிரான போரை தொடர்ந்து எடுத்து வரும் உக்ரைன், அமெரிக்கா வழங்கும் இராணுவ உதவியால் தன்னுடைய எதிர்ப்பை நிலைநாட்டிக் கொண்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா, உக்ரைனின் கோரிக்கையை ஏற்று ரஷ்யாவின் தொலைதூர பகுதிகளில் தாக்குதல் நடத்த 6 ஏவுகணைகளை அனுப்ப அனுமதி அளித்தது. இதனிடையே, ரஷ்யா, மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான புதிய கொள்கையை அறிவித்து, உலகப் பேரழிவை ஏற்படுத்துவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.