ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் பிரித்தானியா!
தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பித்து வெளியேறும் 20,000 ஆப்கானிஸ்தானியர்களுக்கு அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்படுமென பிரித்தானியா உறுதியளித்துள்ளது.
எனினும், இந்த ஆண்டில் வெறும் 5,000 பேரினை மாத்த்ரமே ஏற்று கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
ஆப்கானிலிருந்து தப்பி வெளியேறும் மக்களுக்கு உதவி செய்வதற்காக பிரித்தானியா புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
அதில் பிரித்தானியாவிற்காக பணிபுரிந்தவர்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.
அதன்பின், துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பெண்கள், குழந்தைகள் மற்றும் பிறருக்கு முன்னுரிமை அளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்கள் 12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் அடிமைகளாக குறி வைத்து வருவதாகக் கொடூர தகவல்கள் கூறுகின்றன.
இத்திட்டத்தின் மூலம் ஏறக் குறைய 5,000 ஆப்கானியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இந்த ஆண்டு பயன் அடைவார்கள் என கூறப்படுகிறது.