உக்ரைனில் மின்சாரமின்றி வாடும் குடும்பங்கள்!
ரஷ்யா எரிசக்தி உட்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்திய தாக்குதல்களால், உக்ரேனில் 10 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரேனின் எரிசக்தி அமைச்சின் தகவலின்படி, இது இந்த ஆண்டுக்குள் 11 ஆவது பெரிய தாக்குதல் ஆகும். இத்தாக்குதலால் நாட்டின் மேற்குப் பகுதிகள், எல்விவ், வோலின் மற்றும் ரிவ்னே உள்ளிட்ட இடங்களில் பரவலான மின்தடைகள் ஏற்பட்டுள்ளன.