கனடா சர்வதேச மாணவர் விரைவு விசா திட்டம் நிறுத்தம்
கனடா அரசு, சர்வதேச மாணவர்களுக்கான விரைவு விசா திட்டத்தை 2024 நவம்பர் 8ஆம் தேதி பிற்பகல் 2 மணியுடன் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த இந்த திட்டம், வெளிநாட்டு மாணவர்களுக்கு கனடாவில் கல்லூரி படிப்பை தொடர்வதற்கான விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனை செய்ய உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டத்தின் மூலம் பல நாடுகளுக்கு சேர்ந்த மாணவர்கள் கனடாவில் தங்கள் கல்வியை தொடர முடிந்தனர். எனினும், வெளிநாட்டு மாணவர்கள் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து, கனடாவில் வீடுகளின் குறைபாடு, குடியிருப்பு வசதிகள், மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான சிக்கல்கள் உருவாகின.
இதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக இந்த திட்டத்தினால் உருவாகியுள்ள சிக்கல்களை சரிசெய்யும் நோக்கில், கனடா அரசு இந்நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளது.