டிரம்ப் வெற்றியால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு உயர்வு!
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதன் மூலம், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் நிகர சொத்துமதிப்பு ஒரே நாளில் 26.5 பில்லியன் டொலர்கள் உயர்ந்துள்ளது. உலகின் மிகப் பெரிய பணக்காரரான மஸ்க், டிரம்பின் ஆதரவாளராக இருந்து அவரது பிரச்சாரத்திற்கு பெரும் அளவு நன்கொடை வழங்கினார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டு படி, மஸ்க்கின் சொத்துமதிப்பு 290 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. டெஸ்லாவின் பங்குகள் 14.75% உயர்ந்து 288.53 டொலராகவும், இதற்கிடையில், டிரம்பின் வெற்றியால் அமெரிக்க பங்குச் சந்தை உயர்ந்துள்ளதையும் குறிப்பிட வேண்டும்.