பங்களாதேஷில் இந்து கோயில்களின் மீது தாக்குதல்!
பங்களாதேஷில் இஸ்கான் அமைப்பின் தலைவரான சின்மோய் கிருஷ்ணதாசை பொலிஸார் கைது செய்ததுடன், தேசத்துரோக வழக்குகளில் 10 நாள் காவலில் வைத்துள்ளனர். சிட்டகாங் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை விடுதலை செய்யக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் பொலிஸாரும் போராட்டக்காரர்களும் மோதினர்.
இதன்போது, கண்ணீர் புகை குண்டு மற்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பலர் காயமடைந்தனர். மேலும், இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, சிட்டகாங் உள்ளிட்ட பல இடங்களில் கோவில்கள் சேதமடைந்துள்ளன.
அதோடு, அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்துக்கள் மீது ராணுவ தாக்குதலும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடப்பை கண்டித்து நீதிபதிகள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். மக்கள் அமைதியுடன் செயல்பட வேண்டும் என இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.