120வயது வரை வாழ வைக்கும் மருந்தினை கண்டுபிடித்தது இஸ்ரேல்!
ஒருவரது ஆயுட் காலத்தினை 120 வயது வரை அதிகரிக்க கூடிய மருந்து ஒன்றினை இஸ்ரேல் மருத்துவர்கள் கண்டுபிடிதுள்ளனர்.
இம்மருந்திற்கு SIRT6 என பெயரிட்டுள்ளனர்.
இக்கண்டுபிடிப்பானது உலக மருத்துவ துறையினை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆய்வுகூடத்தில் வைத்து SIRT6 மருந்தினை எலிகளுக்கு செலுத்தி பரிசோதனைகளை மேற்கொண்டதில், எலிகளது ஆயுட்காலமானது 23%தினால் அதிகரித்தமையினை ஆய்வுகள் ஊடாக கண்டுபிடிக்க முடிந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
SIRT6 என்ற புரோடீன் அதிகரிக்கின்ற இந்த ஔடதம் சுகதேகியாகவும், ஆயுளை அதிகரிக்கும் சக்தியையும் சரீரத்திற்கு அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களிடத்தில் ஆயுள் அதிகரிக்கும் பரிசோதனையை நடத்திப்பார்க்கலாம் என இஸ்ரேலில் அமைந்துள்ள பார் இலான் பல்கலைக்கழக பேராசிரியர் ஹயிம் கொஹேன் (Haim Cohen)தெரிவித்துள்ளார்.