பிரான்சில் ஒரே நாளில் 5இலட்சம் பேருக்கு தொற்று!
நேற்றைய தினத்தில் மாத்திரம் பிரான்சில் 4 இலசத்தி 64ஆயிரத்தி 769 பேருக்கு ல்ப்விட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரான்சில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரேநாளில் சுமார் 5இலட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
தொற்று பரவலை தவிர்க்கவென, பிரான்ஸ் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சிறு பிள்ளைகளுக்கு கூட முகக்கவசம் கட்டாயம், தேநீர் கடைகளிலும் மதுபான விடுதிகளிலும் நின்று கொண்டு தேநீர், மதுஅருந்த தடை என கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி பெறாதவர்கள் பொதுவாழ்வின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதவகையில், தடுப்பூசி அட்டை கடுமை ஆக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளபோதும் கூட, பிரான்சில் தொற்று உச்சம் தொட்டுள்ளது.