நாட்டின் மின்கட்டமைப்பை சீரமைக்க 80 கோடி யூரோ தேவை

ரஷ்யா தாக்குதலால் உக்ரைனில் சேதத்திற்கு உள்ளான மின்கட்டமைப்பை சீரமைப்பதற்கு 80 கோடி யூரோக்கள் தேவைப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைனுக்கு உதவுவதற்காக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த சர்வதேச மாநாட்டில் இக்கோரிக்கையை முன்வைத்த ஜெலன்ஸ்கி, நிதியாக மட்டுமின்றி மின்மாற்றிகள், உயரழுத்த மின்கம்பிகள், ஜெனரேட்டர்கள் போன்றவற்றையும் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார கட்டமைப்புகள் சேதப்படுத்தப்பட்டதால் வரும் குளிர் காலத்தை சமாளிக்கும் வகையில் சுமார் இரண்டு பில்லியன் கன மீட்டர் கூடுதல் எரிவாயுவை வழங்க வேண்டுமென ஜி7 நாடுகளுக்கு கோரிக்கை விடுத்த ஜெலன்ஸ்கி போரிட அதிக டாங்கிகள் மற்றும் ஏவுகணைகளை வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.