நோயாளிகளை சந்திக்க வருபவர்கள் கட்டாயம் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும்!
ஒட்டாவா மருத்துவமனையில் நோயாளிகளை சந்திக்க வருபவர்கள் கட்டாயம் தடுப்பூசி சான்றிதழை கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை முதல், ஒட்டாவாவின் மிகப்பெரிய மருத்துவமனைக்கு செல்லும் பார்வையாளர்கள் சிவிக் வளாகம், பொது வளாகம் மற்றும் ரிவர்சைட் வளாகத்திற்குள் நுழைவதற்கு முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
தடுப்பூசி போட்டுக் கொள்வதால், கொரோனா பாதிப்பால் கடும் அவதியுறும் நிலை ஏற்படாது எனவும், மருத்துவமனையில் சேர்ப்பிக்கும் நிலையில் இருந்து தப்பலாம் என்பது மட்டுமின்றி இறப்பு ஏற்படுவதும் மிக குறைவு என ஒட்டாவா மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.
அதனாலையே, வரவிருக்கும் வாரங்களில், இப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்லும் பார்வையாளர்களுக்கு தடுப்பூசி சான்று கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 27 முதல் தடுப்பூசி சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இதனால் மருத்துவமனையில் உள்ள அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. தடுப்பூசி சான்றானது பார்வையாளர்களுக்கு மட்டுமே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி நோயாளிகளுடன் துணைக்கு வருபவர்களும் கட்டாயம் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மேலும், குழந்தைகளை பராமரிக்க வரும் பெற்றோர் அல்லது உதவியாளர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
ஒட்டாவா மருத்துவம்கனை மட்டுமின்றி, தற்போது மான்ட்ஃபோர்ட் மருத்துவமனையும் பார்வையாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என அறிவித்துள்ளது. அக்டோபர் 6 முதல் இனி அனைத்து பார்வையாளர்களும் குறித்த மருத்துவமனையில் தடுப்பூசி சான்றுடனே செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.