உலக கிண்ண கோபுடோ போட்டியில் ஈழத்து மாணவி முதலிடம்!
WUMF அமைப்பினால் நடாத்தப்பட்ட உலகக் கிண்ண கோபுடோ (ஜப்பானிய ஒக்கினாவா பாரம்பரிய ஆயுத தற்காப்புக்கலை ) காட்டா சுற்று போட்டிகளில் புலம்பெயர் தமிழ் மாணவி ஒருவர் 1வது இடத்தை பெற்றுள்ளார்.
இந்த போட்டியானது இணையவழி ஊடாக நடாத்தப்பட்ட நிலையில் பெண்கள் சிரேஷ்ட பிரிவில் இவர் போட்டி இட்டிருந்த நிலையில் 1வது இடத்தை பெற்றுள்ளார்.
இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தினை பிறப்பிடமாக கொண்ட குறித்த மாணவி, சுவிட்சர்லாந்தில் வசித்த வருகிறார்.
குறித்த போட்டியில் 2ம், 3ம் இடங்களினை இந்தோனேஷியாவைச் சேர்ந்த Vania A. Sani Shinseidaikan மற்றும் Yayuk Die Shinseidaikan ஆகியோர் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் முதல் இடத்தைப் பிடித்த மாணவி சென்செய் ஸப்தேஷ்ணா கெளரிதாசனுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.