உலகில் அதிக மாசுள்ள நகரமாக லாகூர் அறிவிப்பு!
பாகிஸ்தானின் லாகூர் நகரில் காற்றை மாசுபடுத் தும் தூசு துகள்கள் அதிக அளவில் கலந்துள்ள நிலை யில், உலகிலேயே அதிக காற்று மாசுள்ள நகர மாக பாகிஸ்தானின் லாகூர் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் காற்று மாசுபாட்டை குறிக்கும் காற்றின் தரக் குறியீடு நேற்று வெளியிடப்பட்ட நிலையில், லாகூரில் காற்றின் தரக் குறியீட்டு எண் 500க்கு மேல் தொடர்ந்து 4 ஆவது நாளா கவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, காற்று மாசு தொடர்பில் பாகிஸ் தானில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி அரசின் சார்பில் காற்று மாசுபாட்டைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கவலை வெளியிட் டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.