3 குழந்தைகள் பெற்றுக் கொண்டால் அதிரடி சலுகைகள்!
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. எனினும் சமீபகாலமாக சீனாவில் குழந்தைகளின் பிறப்பு வீதம் மிகவும் குறைவாக உள்ளது.
அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவிலுள்ள ஒட்டுமொத்த பிறப்பு வீதம் ஒரு இலட்சம் பேருக்கு 852 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவிலுள்ள 10 மாநிலங்களிலும் குழந்தைகளின் பிறப்பு 1 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
எனவே இதனைச் சரிசெய்ய சீன அரசாங்கம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது சீன தம்பதிகள் 3 குழந்தைகள் வரை பெற்று கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
மேலும் அதற்காக மானியங்கள், பேறுகால விடுமுறைகள் போன்ற பல சலுகைகளையும் அந்நாடு அரசு சீன தம்பதியினருக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.