நிலவில் மோதும் எலன் மஸ்கின் 4டன் எடைகொண்ட ராக்கெட்!
பிரபல பணக்காரரான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட் நிலவில் மோதவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
வானிலை தொடர்பான ஆய்விற்காக SpaceX உருவாக்கிய Falcon 9 ராக்கெட் 2015ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பபட்டது.
குறித்த ராக்கெட் செயற்கைகோள் திட்டமிட்டபடி புவி வட்டப்பாதைக்கு வெளியே வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. பின் செயற்கைகோளில் இருந்து ராக்கெட் தனியாக பிரிந்து சென்றது.
ராக்கெட் தனது பணியை முடித்த பிறகு பூமியை நோக்கி திரும்புவதற்கு போதுமான எரிபொருள் இல்லாமையால் விண்வெளியில் கைவிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த 7 வருடங்களாக வெவ்வேறு ஈர்ப்பு விசைகளால் ராக்கெட் இழுக்கப்பட்டு விண்வெளியில் முற்றிலும் குழப்பமான பாதையில் ஆபத்தான முறையில் சுற்றி வந்தது.
குறித்த ராக்கெட் மார்ச் 4ம் தேதி (2022) நிலவில் மோதுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் நான்கு டன் எடை கொண்ட இந்த ராக்கெட் மணிக்கு 5,000 மைல் வேகத்தில் நிலவின் மேற்பகுதியில் வந்து மோதுமெனவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
எனினும், இவ்வளவு வேகத்தில் மோதினாலும் நிலவில் அதன் பாதிப்பு மிக சிறிய அளவிலேயே இருக்குமென தெரிவிக்கப்படுகிறது.