தனிமைப்படுத்தலில் இருக்கும் கனடா பிரதமர் ட்ரூடோ!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரோடு தொடர்பில் இருந்ததை அறித்த நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேற்கொண்ட விரைவான பரிசோதனையில் எதிர்மறையாக வந்ததாகவும் தெரிவித்துள்ளார். எனினும் 5நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
50 வயதான ட்ரூடோ, அனைத்து தடுப்பூசியையும் ஏற்றியுள்ளார், ஜனவரி மாதம் ஒட்டாவாவில் உள்ள மருந்தகத்தில் கொவிட்-19 பூஸ்டர் டோஸை பெற்றார்.