பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல், மூவர் பலி
மேற்கு பாகிஸ்தானில் இன்று பொலிஸ் வாகனத்தை குறிவைத்து நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் மூவர் உயிரிழந்ததுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
போலியோ தடுப்பூசி செலுத்தும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக செல்ல இருந்த பொலிஸ் குழு ஒன்றை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பிலிருந்து வேறுபட்டு இயங்கும் TTP அமைப்பு பொறுப்பேற்றுள்ளது
ஆப்கானில் தலிபான்கள் மீள ஆட்சிக்கு வந்த ஓராண்டில், பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக பாக்க்கிஸ்தான் அமைதி ஆய்வு நிறுவனம் (PIPS) தெரிவித்துள்ளது.