ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்தது!!
ஐஸ்லாந்தின் தெற்மேற்கே உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் பல வாரங்களாக கொதித்துக்கொண்டிருந்து எரிமலை வெடித்தது.
உள்ளூர் நேரப்படி 22:17 மணியளவில் எரிமலை வெடிப்பு ஏற்படத்தொடங்கியது என ஐஸ்லாந்திய வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
க்ரிண்டாவிக் நகருக்கு வடகிழக்கே சுமார் 4 கிமீ (2.5 மைல்) தொலைவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நில அதிர்வு நடவடிக்கைகள் நகரத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எரிமலையில் ஏற்பட்ட விரிசல் சுமார் 3.5 கிமீ நீளம் கொண்டது, எரிமலைக்குழம்பு வினாடிக்கு சுமார் 100 முதல் 200 கன மீட்டர்கள் வரை பாய்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் அப்பகுதியை விட்டு மக்கள் விலகி இருக்குமாறு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில் மீன்பிடி நகரமான கிரின்டாவிக் நகரிலிருந்து சுமார் 4,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.
2010 இல் ஐரோப்பிய விமானப் பயணத்தை நிறுத்திய அதே அளவிலான இடையூறுகளை இது கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.
ஐஸ்லாந்துக்கு வரும் விமானங்களுக்கு எந்த இடையூறும் இல்லை. மேலும் சர்வதேச விமான தாழ்வாரங்கள் திறந்தே இருக்கும் என ஐஸ்லாந்து வெளியுறவு அமைச்சர் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.