ஜப்பான் மக்கள் தொகை மீண்டும் குறைவடைந்தது
ஜப்பானின் மக்கள் தொகை விகிதம் மீண்டும் குறைவடைந்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 0.48 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பானின் மக்கள் தொகை தொடர்ச்சியாக 13 முறை குறைந்துள்ளது. உள்விவகார அமைச்சு நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் தனியாக வாழும் முதியோர்களின் எண்ணிக்கை 2050ஆம் ஆண்டளவில் 47 சதவீதமாக அதிகரிக்குமென அங்குள்ள ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.