ஈரான் ஜனாதிபதியின் விபத்தான ஹெலிகப்டர் படங்கள் வெளியாகின
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்துள்ளார்.
அசர்பைஜான் – ஈரான் இடையேயுள்ள அரஸ் ஆற்றின் குறுக்கே, இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3வது அணையின் திறப்பு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த அணை திறப்பு விழாவினை முடித்துவிட்டு ஹெலிகாப்டர் மூலம் இப்ராகிம் ரைசி ஈரான் திரும்பிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்திருந்தார்.
இதன்போது ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹொசைன் அமிரப்டோலாஹியன், மாகாண ஆளுநா் மற்றும் அதிகாரிகளும் உடன் பயணித்ததாக கூறப்படுகிறது.
அசர்பைஜானை ஒட்டிய ஈரானின் ஜல்பா நகரில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியது.
தொடர்ந்து, ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கருத்தப்படும் பகுதியில் கடுமையான மழை மற்றும் பனி மூட்டம் இருப்பதால் மீட்புப்பணிகள் தாமதாமாகியுள்ளதாக தகவல் வெளியாகியது.
இதனையடுத்து, இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டரின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் விபத்து நடந்த இடத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளன, ரைசியின் ஹெலிகாப்டரை ஒரு மலையின் ஓரத்தில் துண்டுகளாக காணப்படுகிறது.