பழத்திற்குள் வைத்து போதைப்பொருள் கடத்த முயற்சி
ஸ்பெயின் துறைமுகத்தில் கடந்த வாரம் சரக்குக் கப்பலில் மறைத்து கடத்த முயற்சிக்கப்பட்ட 13 டன் போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர், இதனுடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ஸ்பெயின் அரசு நாடு முழுவதும் தீவிர சோதனைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான சோதனைகளில் 204 டன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, இது கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவான ஆண்டு சராசரியை விட அதிகமாகும்.
குறிப்பாக, ஈக்வடாரின் குவாயாகிலில் இருந்து அல்ஜீசிராஸ் வந்திருந்த கப்பலில், வாழைப்பழக் குடைகளின் பின்னால் மறைத்து வைக்கப்பட்ட 13,000 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், காவல்துறையினர் இந்த பொருட்களை பறிமுதல் செய்து, கப்பலில் உள்ள மற்ற சொத்து மேலாளர்களைக் கைது செய்ய தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே சட்டவிரோத கடத்தலுக்கு அந்த நிறுவனத்தின்மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது.