பாகிஸ்தானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!
பாகிஸ்தானின் கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் 19-ந்தேதி இரவில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரின் சோதனைச் சாவடியை இலக்காக வைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 12 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். குண்டுகள் நிரப்பிய கார் தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களிடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது, இதில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். காயமடைந்த இராணுவ வீரர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.