நெதன்யாகுவைக் கைது செய்ய வேண்டாம் – போலந்து ஜனாதிபதி
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போலந்து வந்தால் சர்வதேச நீதிமன்றின் பிடியாணையின் கீழ் அவரைக் கைது செய்யக்கூடாது என போலந்தின் ஜனாதிபதி டுடா அரசாங்கத்திடம் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சர்வதேச பிடியாணையின் கீழ் கைது செய்யப்படுவார் என்ற அச்சமின்றி ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் மரண முகாம் விடுவிக்கப்பட்டதன் 80 வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதை உறுதி செய்யுமாறு போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரேஜ் டுடா அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) நவம்பரில் நெதன்யாகு மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைப்சர் மற்றும் ஹமாஸ் தலைவர் இப்ராஹிம் அல்-மஸ்ரி ஆகியோருக்கு 15 மாத காசா போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக கைது செய்ய பிடியாணை பிறப்பித்தது.
ஜனவரி 27 ஆம் திகதி ஆஷ்விட்ஸ் நினைவேந்தலில் கலந்து கொள்ள முடிவு செய்தால், நெதன்யாகுவை கைது செய்ய வேண்டாம் என்று பிரதமர் டொனால்ட் டஸ்கின் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியதாக ஜனாதிபதியின் உதவியாளர் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
டுடா இன்னும் பதிலுக்காக காத்திருப்பதாகவும் இதுவரை எதுவித பதிலும் கிடைக்கவில்லை எனவும் ஜனரபதியின் உதவியார் கூறியுள்ளார்.
போலந்து போன்ற ஐசிசியின் உறுப்பு நாடுகள் தங்கள் மண்ணில் காலடி எடுத்து வைத்தால் பிடியாணையை எதிர்கொள்ளும் சந்தேக நபர்களை தடுத்து வைக்க வேண்டும், ஆனால் அதைச் செயல்படுத்த நீதிமன்றத்திற்கு வழி இல்லை. இஸ்ரேல் ஐசிசியில் உறுப்பினராக இல்லை மற்றும் அதன் அதிகார வரம்பை மறுக்கிறது.
பிரான்ஸ் மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட சில நாடுகள் அவரை கைது செய்ய மாட்டோம் என்று ஏற்கனவே கூறியிருந்தாலும், நீதிமன்றத்தில் 120 க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகள் உள்ளன.
ஹங்கேரிய பிரதம மந்திரி விக்டர் ஓர்பன், நெதன்யாகுவை புடாபெஸ்டுக்கு அழைப்பதன் மூலம் உத்தரவை மீறுவதாகக் கூறினார்.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆஷ்விட்ஸ் விடுதலையின் 80 வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளப் போகிறார் என்பதைக் குறிக்கும் எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்று போலந்து வெளியுறவு அமைச்சகம் நேற்று வியாழக்கிழமை கூறியது.