புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சாக்லேட் தவளை!

சாக்லேட் நிறத்திலான தவளையானது பாப்புவா நியூ குனியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்கள் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகின்றது.

உலந்த்தின் 2வது மிகபெரிய தீவான பாப்புவா நியூ குனியா எனும் தீவுள்ளது. இத்தீவின் பெரும்பாலன பகுதி காடுகளால் ஆனது. இங்கே வித்தியாசமான பல உயிரினங்கள் இருக்கின்றன.

சாக்லேட் நிறத்திலான தவளை ஒன்று சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.

தவளைகள் பொதுவாக பச்சை/ வெளிர் நிறத்தில் காணப்படும், ஆனால் இப்படி சாக்லேட் தோல் கொண்ட தவளை மிக அரிய வகை தவளையாகும்.

இந்த சாக்லேட் தவளையை பார்வையிட்டவர்கள் புகைப்படம் எடுத்து சமூகவலைத் தளங்களில் பகிர்ந்து வருவதை அடுத்து அவை வைரலாகி வருகின்றது.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய சுகாதார துறையினர் குயின்ஸ்லாந்து மியூசியத்தில் ஒரு கூட்டத்தை நடத்தியது. அதில் இந்த தவலை ஆஸ்திரேலிய ஜர்னர் என்ன உயிரினங்களுக்கான புத்தகத்தில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த வகையை பார்த்தவர்கள் அதை பதிவு செய்து வைத்திருந்தனர். அதன் பின் இது மனிதர்கள் கண்ணில் படாமலேயே பல ஆண்டுகளாக இருந்துள்ளது.

இவ்வாறான நிலையில் தற்போது மீண்டும் மனிதர்கள் கண்ணில் பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான தவளைகள் மிக அடர்ந்து மலைக் காடுகளில்தான் வாழும். அத்துடன் அந்த தவளைகள் அதைவிட்டு மனித நடமாட்டமுள்ள பகுதிக்கு வருவது மிகவும் அரிதானது என குறிப்பிட்டனர்.

இத்தவளைக்கு Litoria Mira எனும் அறிவியல் பெயரினை விஞ்ஞானிகள் வழங்கி வைத்திருந்த போதிலும் மக்கள் சாக்லேட் தவளை என்றே அழைத்துவருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.