ஜப்பானில் தீப்பிடித்த பயணிகள் விமானம்!
A passenger plane caught fire in Japan

379 பயணிகளுடன் ஜப்பான் ஏர்லைன்சிற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ விமான நிலையத்தில் தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
நேற்று செவ்வாய்கிழமை ஜப்பானிய நேரப்படி மாலை 6 மணியளவில், டோக்கியோ ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கிய AIRBUS A350 விமானம் திடீரென தீப்பிடித்தது.
கடந்த 1ம் திகதி ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக புறப்பட்ட ஜப்பானிய கடலோர காவல்படைக்கு சொந்தமான விமானத்துடன் மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.
விபத்து நடந்த இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் விமானத்தில் 8 குழந்தைகள் உட்பட 379 பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாகவும் தெரியவருகிறது.