மீண்டும் கொரோனா 10 ஆயிரம் பேரை காவு கொண்டது
கடந்த டிசம்பர் மாதம் கொவிட்-19 தொற்று நோயால் கிட்டத்தட்ட 10,000 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
50 நாடுகளில் பெரும்பாலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42% அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில்,டிசம்பர் மாதம் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கை 62% அதிகரித்துள்ளது.
ஒரு மாதத்திற்கு 10,000 இறப்புகள் தொற்றுநோயின் உச்சத்தை விட மிகக் குறைவு என்றாலும், தடுக்கக்கூடிய இறப்புகளின் அளவு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்லஎன்று உலக சுகாதரா அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சிகிச்சைக்கான அணுகலைத் தொடருமாறு அவர் அரசாங்கங்களை வலியுறுத்தினார்.
தடுப்பூசி போடவும், பரிசோதனை செய்யவும், தேவைப்படும் இடங்களில் முகமூடிகளை அணியவும் மற்றும் நெரிசலான உட்புற இடங்கள் நன்கு காற்றோட்டமாக இருப்பதை உறுதிப்படுத்தவும் தனிநபர்களுக்கு நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறோம், என்று அவர் கூறினார்.
புதிய JN.1 மாறுபாடு உலகில் அதிகமாகப் புகாரளிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடு ஆகும். தற்போது இத்தொற்று பரவி வருகிறது.