ஐரோப்பா நாடுகளின் விமான பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட ஐரோப்பா நாடுகளில் விமான டிக்கட் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் மக்கள், கட்டண அதிகரிப்பு குறித்து கவலையடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான அதிகரிப்பு நிலைமை எதிர்வரும் காலங்களில் தொடரும் என்று ஐரோப்பிய விமான சேவைகளின் உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் விலை உயர்வுக்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன. 2021ஆம் ஆண்டுடன் உடன் ஒப்பிடுகையில், விமான டிக்கெட்டுகளுக்கு, நடுத்தர தூர வணிக விமானத்திற்கு கட்டணங்கள் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
ஜெர்மனியில் இருந்து புறப்படும் விமானங்களின் டிக்கட் கட்டணங்கள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியை விட 20.4 சதவீதம் உயர்ந்துள்ளது.
2019ஆம் செப்டம்பர் மாததத்துடன் ஒப்பிடும் போது இந்த கட்டணம் 21 சதவீதம் அதிகமாக உள்ளது எனவும் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஐரோப்பா முழுவதும் நடுத்தர தூர சேவைகளின் விமான டிக்கட் கட்டணம் 23.6 சதவீதத்திற்கும் அதிகமாக மிகப்பெரிய விலை உயர்வை கண்டுள்ளது.
பணவீக்கம் மற்றும் எரிபொருள் நெருக்கடி மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக இந்த அளவிற்கு டிக்கட் விலை அதிகரித்துள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அதிகரிப்பு இம்முறை குளிர்கால சுற்றுலா பயணங்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.