சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 116 பேர் பலி!
சீனாவின் வடமேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 126 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 700க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இறப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலைப்பகுதியான கன்சு மாகாணத்தில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் அண்மைய மாகாணமான கிங்காயையும் இந்த நிலநடுக்கம் உலுக்கியது.
கன்சு திபெத்திய மற்றும் லோஸ் பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது மற்றும் மங்கோலியாவின் எல்லையாக உள்ளது.
மீட்புப் பணிகளை மேற்கொள்ள அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
-13C பனியுறைந்த இப்பகுதியில் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி மக்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக முகாங்களில் தங்கியுள்ளனர்.
கன்சு மாகாணத்தில் மிகவும் பாதிப்படைந்த ஜிஷிஷான் பகுதியில் 5,000 க்கு அதிகமான கட்டிடங்கள் சேதடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்பதியில் உள்ள கிராமக் கட்டிடத்தின் தரம் பழமையானது. களி மண்ணால் ஆன வீடுகள் இங்கே காணப்பட்டன. அவை பரவலாக உடைந்து சேதடைந்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்தன. இப்பகுதி சீனாவின் மிக ஏழ்மையான பகுதிகளில் ஒன்றாகும்.
ஹுய், போனான், டோங்சியாங் மற்றும் சாலார் மக்கள் உட்பட பல சீன முஸ்லீம் குழுக்களின் தாயகமான லின்சியா ஹுய் தன்னாட்சி மாகாணத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 10 நில அதிர்வுகள் ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று செவ்வாய்க்கிழமை கன்சுவின் மேற்கில் உள்ள மாகாணமான ஜின்ஜியாங்கிலும் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பில் எதுவித உயிரிழப்புகள் பற்றிய உடனடி அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.