விடுதலை புலிகளுடன் எமக்கு தொடர்பு இல்லை – தலிபான்கள் அறிவிப்பு!
விடுதலைப்புலிகளுடன் தமது அமைப்பிற்கு எந்த தொடர்புமில்லை என தலிபான் அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தலிபானின் பேச்சாளர் சுகைல் சஹீன் இதனை டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார்.
தலிபான் சுதந்திரமான விடுதலை அமைப்பு எங்களிற்கு விடுதலைப்புலிகளுடன் எந்த தொடர்புமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலிபான் என்பது 20 வருடங்களாக வெளிநாட்டு ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய அமைப்பு எங்கள் நாடான ஆப்கானின் விடுதலைக்காக போராடிய அமைப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான முறையில் ஆட்சிமாற்றத்திற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக தலிபான் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.