புதிய பாப்பரசர் தேர்வு மே 7ல்: வத்திக்கான் அறிவிப்பு

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்குப் பிறகு, புதிய பாப்பரசரைத் தேர்வு செய்யும் அதிகாரப்பூர்வ கூட்டம் (காங்ளேவ்) மே 7 ஆம் தேதி நடைபெறும் என வத்திக்கான் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் 135 கர்தினால்கள் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 53 பேர் ஐரோப்பாவிலிருந்து, 23 பேர் ஆசியாவிலிருந்து, 20 பேர் வட அமெரிக்காவிலிருந்து, 18 பேர் ஆப்பிரிக்காவிலிருந்து, 17 பேர் தென் அமெரிக்காவிலிருந்து மற்றும் 4 பேர் ஓசியானியாவிலிருந்து வருகிறார்கள்.

உலகின் 71 நாடுகளைச் சேர்ந்த இந்த கர்தினால்கள் அனைவரும் 80 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

இந்த தேர்தல் வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் நடைபெறும். இது உலகின் மிகவும் இரகசியமான வாக்கெடுப்பாகக் கருதப்படுகிறது.

புதுப் பாப்பரசர் தேர்வுக்காக சிஸ்டைன் தேவாலயம் ஏப்ரல் 28ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளது.

கர்தினால்கள் சிவப்பு உடை அணிந்து வாக்களிப்பார்கள். தேர்தலுக்குப் பின், வாக்குச் சீட்டுகள் எரிக்கப்படுகின்றன. இது இரகசியத்தன்மையைப் பாதுகாக்கும் பழமையான மரபாகும். இந்த நடைமுறை 1800ஆம் ஆண்டில் இருந்து தொடர்கிறது.

வாக்கெடுப்பு முடிந்ததும், புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கூற, சிஸ்டைன் தேவாலயத்திலுள்ள புகைக் குழாயில் இருந்து வெள்ளை புகை வெளியேறுகிறது. இது, ஒரு வேட்பாளர் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பதை அறிவிக்கும் அடையாளமாகும்.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.