ஈரானின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்!!
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தி 24 மணி நேரத்திற்குப் பின்னர் ஈரான் – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மேலும் பதட்டங்களை அதிகரித்துள்ளன. இது ஒரு பரந்த மோதலுக்கான அச்சத்தைத் தூண்டியது.
ஈரானின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரானின் சிஸ்தான் – பலூசிஸ்தான் மாகாணத்தில் ஆயுதக் குழுக்களின் மறைவிடங்களுக்கு எதிராக பாகிஸ்தான் உளவுத்துறை அடிப்படையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்தது.
இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு “மார்க் பார் சர்மாச்சார்” (சர்மாச்சாருக்கு மரணம்) என்று குறியீட்டுப் பெயரை பாகிஸ்தானால் சூட்டப்பட்டது.
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்தது.
ஈரானின் வெளியுறவு அமைச்சகம், தாக்குதல்களுக்கு விளக்கங்களை வழங்க தெஹ்ரானில் உள்ள மூத்த பாக்கிஸ்தான் தூதரை வரவழைத்தது.
ஈரான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் பஞ்ச்கூர் நகருக்கு அருகில் ஜெய்ஷ் அல்-அட்ல் என்ற ஆயுதக் குழுவிற்கு எதிராக ஈரான் “ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை” பயன்படுத்தி வான்வழித் தாக்குதல்களை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு பாகிஸ்தானின் பதில் தாக்குதல் வந்தது.
இதேநேரம் பாகிஸ்தானுக்கு பின்புலமாக இந்த நடவடிக்கையை எடுக்க அமெரிக்கா இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.