தென்கொரிய எல்லையில் வடகொரியா பீரங்கி குண்டு வீசியதில் பதற்றம்
வடகொரியா – தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வரும் நிலையில் தென்கொரிய எல்லை அருகே 130 முறை வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசியுள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரிய எல்லைப்பகுதியில் வடகொரியா இன்று பீரங்கி குண்டு வீசி பயிற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான கடல் எல்லையின் சர்ச்சைக்குரிய பகுதியில் வடகொரியா இன்று 130 முறை பீரங்கி குண்டு வீசியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.