பெலாரஸ் எல்லைப் பாதுகாப்பை கடுமையாக்கும் உக்ரைன்
புதிய தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகிவிடுமோ எனும் அச்சத்தில் பெலாரஸ் உடனான எல்லைப் பாதுகாப்பை உக்ரைன் கடுமையாக்குகின்றது.
உக்ரைன் ஆயுதப்படைகள் மற்றும் வெடிமருந்துகள் மூலம் பெலாரஷ்யன் எல்லையை வலுப்படுத்துமென உள்துறை அமைச்சர் யெவ்ஹென் யெனின் தெரிவித்துள்ளார்.
விளாடிமிர் புடின், பெலாரஷ்ய ஜனாதிபதியை சந்திக்க சென்றுள்ள நிலையில், இச்செய்தி வந்துள்ளது.
பெலாரஸ், ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் ஒரு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
ரஷ்யா தனது சொந்தம் என கூறும் உக்ரைனின் பகுதிகளில் வாழும் மக்களின் பாதுகாப்பை சிறப்பு சேவைகள் உறுதி செய்ய வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி கூறினார்.
பெலாரஸ் நேரடியாக போரில் ஈடுபடவில்லை என்றாலும், பெப்ரவரியில் படையெடுப்பைத் தொடங்க ரஷ்ய துருப்புக்கள் அதன் பிரதேசத்தைப் பயன்படுத்த அனுமதித்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.