கைலாசாவை தனிநாடாக ஏற்று கொண்ட ஐ.நா? (வீடியோ)
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினரின் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவின் 14வது கூட்ட தொடரில் இரண்டாவது மாநாட்டில் “கைலாசா தேசம்” தனிநாடாக பங்கேற்றுள்ளது.
சத்தமில்லாமல் ஒரு தேசத்தினை உருவாக்கி, அதற்கான அங்கீகாரத்தினையும் ஐக்கிய நாடுகள் சபையில் பெற்று கொண்டுள்ளார் சுவாமி நித்தியானந்தா.
இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக நித்தியானந்தா உள்ளார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கைலாசா எனும் நாட்டினை உருவாக்கியுள்ளதாகவும் இதற்கான கடவுச்சீட்டுக்கு விருபியவர்கள் இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நித்தியினால் உருவாக்கப்பட்ட கைலாசா நாடு, ஐக்கிய நாடுகள் சபையின் கூட்ட தொடரில் இடம்பிடித்துள்ளமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.