ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தொடர் வான்வழி தாக்குதல்
ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நேற்றிரவு தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இம்மாதம் முதல் வாரத்தில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் கூட்டு நடவடிக்கைகளைத் தொடங்கின.
ஏமனில் உள்ள ஹூதி இலக்குகள் மீது பல வான்வழித் தாக்குதல்களை நடத்துவதற்கு அவர்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நேற்றிரவு ஹவுதிகள் எட்டு இலக்குகளை தாக்கியதாக பென்டகன் அறிவித்துள்ளது.
செங்கடலில் பயணித்த மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த வணிகக் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அவர்களை குறிவைத்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவ நடவடிக்கைகளை தொடங்கின.
பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தும் வரை தங்களது தாக்குதல்கள் தொடரும் என ஹூதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.