ஜோ பைடன் மகனுக்கு மன்னிப்பு!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது மகன் ஹண்டர் பைடனுக்கு இரண்டு குற்றவியல் வழக்குகளில் தண்டனையை எதிர்நோக்கியபோது அதிகாரபூர்வமாக மன்னிப்பு வழங்கியுள்ளார்.
பைடன், கடந்த மாதம் மகனை மன்னிக்க மாட்டேன் என்று கூறியிருந்தாலும், நேற்று அவர் முழுமையான மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பை கையெழுத்திட்டுள்ளார்.
ஹண்டர் பைடன், செப்ரெம்பர் மாதத்தில் வரிக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார், மேலும் ஜூன் மாதத்தில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையாளர் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.