வீட்டுக்கு ஒரு விமானம் வைத்திருக்கும் கிராமம்

நம்ம நாட்டுல வீட்டுக்கு ஒரு கார் வைத்திருப்பதே சாத்தியம் இல்லாத சூழ்நிலை காணப்படுகிறது

ஆனால் அமெரிக்கா என்று கலிபோர்னியாவில் இருக்கிற கேமரூன் ஏர்பார்க் என்ற கிராமத்தில மக்கள் தங்களுடைய அன்றாட தேவைகளுக்காக விமானத்தைதான் பயன்படுத்துறாங்க.

இந்த கிராமத்துல வேலைக்கு போறதுக்கு அலுவலகத்துக்கு போறதுக்கு விமானத்தை தான் பயன்படுத்துறாங்களாம்.

அக்கிராமத்தில் உள்ள வீதி விமான நிலையம்போல் காட்சியளிக்கிறது.

விமானம் வைத்திருக்க விமான ஓட்டிகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் விமானத்தை இயக்குவது குறித்த விவரங்களை தெரிந்தவர்கள் மட்டுமே விமானம் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

அவர்களை தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த கேமரூன் ஏர்பார்க்கில் வசிப்பவர்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்ற விமானிகளாக இருக்கிறார்கள்.

இவர்களுடன் மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களும் வசித்து வருகிறார்கள். இந்த கிராமம் 1963 ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்டது. இங்கு மொத்தம் 124 வீடுகள் உள்ளன. விமானங்களை தங்கள் வீடுகளுக்கு முன்பாக தரையிறக்கவும் அருகில் உள்ள விமான நிலையத்திற்கு எளிதாக செல்லவும் 100 அடி அகலத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் உலக போருக்கு பிறகு அமெரிக்கா, விமானங்களின் செயல்பாட்டை ஊக்குவித்தது. இந்த நிலையில்தான் இந்த விமான நிலையங்களை ஓய்வு பெற்ற இராணுவ விமானிகளுக்கான குடியிருப்பு விமான பூங்காவாக மேம்படுத்த அந்த நாட்டின் விமான போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுத்தது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.