ஹொங்கொங்கில் ஜனநாயக ஆா்வலா்களுக்குச் சிறை!
சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 35 ஜனநாயக ஆதரவாளர்களுக்கு நான்கு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து, நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
2020ஆம் ஆண்டு, அதிகாரபூர்வமற்ற முதல்கட்டத் தேர்தலில் 6.10 லட்சம் மக்கள் வாக்களித்த நிலையில், பின்னர் அந்தத் தேர்தல் செல்லாதது என அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் பங்கேற்றதற்காகவே இந்த 35 ஆதரவாளர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹொங்கொங்கை, 1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது ஹொங்கொங்கிற்கு பிரத்யேக சுதந்திரங்கள் அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
எனினும், ஜனநாயக உரிமைகள் செயல்படாததால், 2019ஆம் ஆண்டு தீவிர மக்கள் போராட்டம் ஏற்பட்டது.
கொரோனா கட்டுப்பாடுகளை அடுத்து மீண்டும் போராட்டம் எழுவதைத் தடுக்க, சீனா தேசிய பாதுகாப்புச் சட்டத்தை 2020இல் நிறைவேற்றியது.
இந்தச் சட்டத்தின் மூலம், ஜனநாயக ஆதரவாளர்கள், அரசுக்கு எதிரானவர்கள் என பலரை கைது செய்து, கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன.
இந்தச் சட்டம், ஹொங்கொங்கில் ஜனநாயக உரிமைகள் குறித்த சுதந்திரங்களை மேலும் கட்டுப்படுத்தியுள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சர்வதேச அளவில், ஹொங்கொங்கின் மக்கள் உரிமைகளின் மீதான சீனாவின் நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. இருப்பினும், சீன அரசு, தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமாது எனப் பதிலளிக்கிறது.
இந்த தண்டனைகள், ஹொங்கொங்கில் ஜனநாயக இயக்கத்தின் மீது இன்னும் அதிகமான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் என்றே அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.