குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த ரஷ்யா திட்டம்!
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 2 ஆண்டுக்கும் மேலாக தொடர்கிறது. இந்த போர் முடிவுக்கு வந்து அமைதி ஏற்படுவதற்கு பல நாடுகள் முயன்றும், போர் நிறுத்தப்படவில்லை.
1999ஆம் ஆண்டுக்குப் பிறகு, ரஷ்யாவில் குழந்தைகள் பிறப்பின் விகிதம் முக்கியமான அளவில் குறைந்துள்ளது. உக்ரைனுடன் நடைபெற்று வரும் போர் காரணமாக 6 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதால், ரஷ்யாவின் மக்கள்தொகை பற்றிய சிக்கல்கள் அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், ரஷ்யா மக்கள்தொகையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பாலியல் அமைச்சகத்தை உருவாக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படுவதாக, ரஷ்ய அதிபர் மாளிகை தகவல் அளித்துள்ளது. மேலும், குழந்தை பிறப்பை அதிகரிக்க பல்வேறு சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன. அதில், தம்பதிகள் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இணையம் மற்றும் மின்சாரத்தை நிறுத்தி, பாலியல் உறவு கொள்வதற்கான வசதியை அரசு வழங்க முடிவு செய்துள்ளது.