டொனால்ட் டிரம்ப் கொலை முயற்சியில் ஈரான் தொடர்பில்லை
அமெரிக்காவின் நீதித் திணைக்களம் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மீது கொலை முயற்சியில் ஈரானின் தொடர்பை குற்றம் சாட்டியதை ஈரான் மறுத்துள்ளது. ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அபாஸ் அராக்சி சமூக ஊடகத்தில் தனது பதிவில் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
அவர் குறிப்பிட்டதாவது, “ஒரு புதிய காட்சி புனையப்பட்டுள்ளது. உண்மையில் அத்தகைய நபர் ஒருவரும் இல்லை. மூன்றாம் தரமான நகைச்சுவையை உருவாக்க, திரைக்கதை எழுத்தாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.”
மேலும் அவர் கூறியதாவது, அமெரிக்க மக்கள் தமக்குப் பிடித்த ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் உரிமையை ஈரான் மதிக்கிறது. ஒரு நாட்டின் முன்னேற்ற பாதை மரியாதையுடன் தொடங்கப்பட வேண்டும் என்றார்.